Sri Durga Advanced K.P. Stellar Astro Center - Kumbakonam

mail astology kumbakonam Mail: ponperivelu@yahoo.co.in
Cell: +91 94427 42606
best astrologer in kumbakonam tanjore
 

விளையாட்டு போட்டியில் வெற்றியாளர் யார்?

பொதுவாக உள்ள 5-ம் பாவ காரகங்களான மகிழ்ச்சி, உற்சாகம், கேளிக்கைகள், கலைகளில் ஆர்வம், இசை, விளையாட்டு துறை, போட்டிபந்தயங்களில் ஈடுபாடு, காதல் உறவுகள், புத்திசாலித்தனம், நோயிலிருந்து குணமடைதல் ஆகியவற்றில் விளையாட்டு போட்டி என்ற காரகத்தினை ஆராய்வோம்.

பொதுவாக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உடல் ஆரோக்கியம், மற்றும் உடல் வலிமை வேண்டும் எனவே முதலில் லக்ன பாவம் சிறப்பாக உள்ளதா என்பதினை ஆராய வேண்டும். ஏனெனில் மற்ற பாவங்கள் சிறப்பாக அமைந்து லக்ன பாவம் சரியாக அமையவில்லை எனில் பலன்களை ஜாதகர் அனுபவிக்க முடியாது.

எனவே லக்ன பாவம் அதற்க்கு சாதகமான 1, 3, 5 ,7, 9, 11 என்ற ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதா என்பதனை ஆராய வேண்டும், அவ்வாறு அமைந்திருந்தால் ஜாதகரின் ஆரோக்கியம், செயல்திறன், சுய முயற்சிகள், ஒரு துறையில் சாதனை படைக்கும் திறன் சிறப்பாக அமைந்துள்ளது என கொள்ள வேண்டும்.

அடுத்து உடல் வலிமைக்கும் மூர்க்கத்தனத்துக்கும் காரகம் பெற்ற செவ்வாயின் நிலையினை ஆராய்தால் வேண்டும், செவ்வாய் லக்னத்திற்கு சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதா என்பதனையும் ஆராய்தல் வேண்டும்

எவ்வகையிலும் செவ்வாய் லக்னத்திற்கு பாதகமான 8, 12 ம் பாவங்களை தொடர்பு கொள்ளாமல் இருப்பது சிறந்ததாகும்.

பிறகு விளையாட்டு துறைக்கு காரகம் பெற்ற 5ம் பாவத்தை ஆராய்தல் வேண்டும். 5 ம் பாவம் என்பது லக்னத்திற்கு திரிகோண பாவமாகும். ஒரு பாவத்திற்கு திரிகோண பாவம் அந்த பாவத்தின் காரகங்களை ஜாதகர் சிரமப்டாமல் அனுபவிப்பதற்கு பெரிதும் உதவி புரியும்.

ஐந்தாம் பாவம் 1, 6, 11 ம் பாவ தொடர்பு கொண்டால் அவர் சிறந்த விளையாட்டு வீரராக இருப்பார். ஐந்தாம் பாவம் 1 ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் போது அது மிக்க வலுபெறுகிறது. 5 ம் பாவம் 6 ஐ தொடர்பு கொள்ளும் போது அது 5 ஐ கெடுக்க வில்லை.

5 ன் அடுத்த நிலை 6 என்பதாலும், இது 7 க்கு 12 ம் பாவம் என்பதால் இவர் மற்றவரை அடக்கி ஆள எண்ணுவார். மேலும் 6 ம் பாவத்தின் ஒரு காரகம் வெற்றி என்பதால் இவர் எதிரியை அடக்கி வெற்றி கொள்வார் எனலாம்.

5 ம் பாவம் 11 ஐ தொடர்பு கொள்வதால் விளையாட்டு போட்டிகளில் தான் அடைந்த வெற்றிகள் மூலம் மனநிறைவுடன், மகிழ்ச்சியுடன் இருப்பார்.

மேற்கண்டவைகளுடன் 5 ம் பாவம் 2 ம் பாவத்திற்கு சாதகமான அதே நேரத்தில் லக்ன பாவத்திற்கு பாதகமில்லாத பாவங்களை தொடர்பு கொள்ளும் போது ஜாதகருக்கு விளையாட்டு போட்டிகள் மூலம் மிக்க பண வரவு கிடைக்கும்.

பொதுவாக பின்வரும் பாவங்களை 5 ம் பாவம் தொடர்பு கொள்வதால் ஏற்படும் விளைவுகள்:

5-1 விளையாட்டுத்துறையின் மூலம் நல்ல கெளரவம், அந்தஸ்து ஏற்படும், விளையாட்டு குழுவில் தலைவராக இருப்பார்.

5-2 விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பார்.

5-3 விளையாட்டு துறையில் அனைவருக்கும் தெரிந்தவராக புகழுடன் இருப்பார். பல இடங்களுக்கு சென்று விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வார்

5-4 5-க்கு 12 ம் பாவம் 4 என்பதால் விளையாட்டு போட்டிகளில் இவரால் நேரடியாக கலந்து கொள்ள முடியாது, ஆனால் லக்ன பாவம் 5 ம் பாவத்திற்கு வலுசேர்க்கும் அமைப்பில் இருந்தால் விளையாட்டு குழுவில் பயிற்சியாளராக இருப்பார்.

5-5 விளையாட்டு போட்டியில் தொழில் ரீதியாக இவர் ஈடுபட முடியாது, ஏனெனில் 10 க்கு 8ம் பாவம் 5 ம் பாவம்

5-6 விளையாட்டு துறையில் வெற்றியாளராக இருப்பார். 7 க்கு 12 ம் இடம் 6 என்பதால் எதிர்பாலரை வீழ்த்தி வெற்றிகொள்வார்.

5-7 இவருக்கு விளையாட்டு போட்டிகள் மூலம் நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். மக்கள் ஆதரவு இருக்கும்.

5-8 விளையாட்டு துறையில் இவரது புகழ் வெளிவராமல் போகும், மற்றும் விளையாட்டு போட்டிகளில் காயம், அங்ககீனம், ஆவதற்கு வாய்ப்புண்டு.

5-9 விளையாட்டில் இவர் பொழுதுபோக்காக கலந்துகொள்வார், ஆனால் முழுநேர தொழில் முறை விளையாட்டு போட்டியாளராக இவரால் இருக்க முடியாது, ஏனெனில் 10 க்கு 12 ம் பாவம் 9.

5-10 விளையாட்டு போட்டிகளில் முழுநேர விளையாட்டு வீரராக கலந்துகொள்வார், அந்தஸ்து பணம் கிடைக்கும். உதாரணமாக உலக கால்பந்து வீரர்கள் பெக்காம், ரொனால்டோ போன்று இருப்பார்.

5-11 விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதின் மூலம் மகிழ்ச்சியாக இருப்பார். நிறைய ரசிகர்கள் இருப்பார்கள்.

5-12 விளையாட்டு போட்டிகளில் வெற்றியாளராக இருக்கமாட்டார். தோல்விகள் அதிகம் கண்டு விரைவில் அதனை விட்டு வெளியே வந்து விடுவார்.

 
Written Books in Astrology
astrologer in kumbakonam, astrology website in kumbakonam, kumbakonam best famous astrologer
Best Kumbakonam Astrologer
astrologer in kumbakonam, astrology website in kumbakonam, kumbakonam best famous astrologer
 
Home :: About Astrologer ::Services :: Articles :: Gallery :: Contact us WebDesign By - Blue Beez Mediaa
Quick Contact: Jothisha Aacharya P.Sakthi Vadivel 7/3A, Banadurai East street, Kumbakonam 612001. Call: 94427 42606
free hits
Track My Website
Copyright © 2015 Astrosakthi.in