Sri Durga Advanced K.P. Stellar Astro Center - Kumbakonam

mail astology kumbakonam Mail: ponperivelu@yahoo.co.in
Cell: +91 94427 42606
best astrologer in kumbakonam tanjore
 

எனது திருமண வாழ்க்கை இவ்வளவுதானா?

ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு தான் பொருள் இருந்தாலும் அல்லது சேர்ந்தாலும் அவரது அக சார்புடைய ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் அவரது வாழ்க்கையே மகிழ்ச்சியற்று போகிறது. வாழ்க்கை துணையின் பிரிவு, துரோகம், மனிதனை பாடாய் படுத்துகிறது. சில சமயங்களில் உயிரையும் பறிக்கிறது. ஒருமுறை தான் பூமிக்கு மனிதராக வருகிறோம், வந்து விட்டோம் எனவே வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்ற எண்ணத்தை கூட ஒருவரது கெட்டுபோன ஏழாம் பாவம் மாற்றி அவரது வாழ்க்கையையே புரட்டிபோட்டு விடுகிறது

இது போன்ற சூழ்நிலையை சந்தித்த ஒரு ஜாதகர் (பெண்) கடந்த மாதம் என்னிடம் வந்து அவரது மணவாழ்க்கை பிரச்சனைக்குரியதாக இருப்பதாகவும் அதற்க்கு என்னதான் தீர்வு ஏற்படும் என்பதனை தங்களது புதிய முறை ஜோதிட ஆய்வில் கண்டு கூறுமாறு கேட்டுகொண்டார். மேலும் தான் மனஉளைச்சலில் இருந்து வருவதாகவும் அடிக்கடி தற்கொலை புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வு ஏற்படுவதாகவும் கூறினார்.

அவர் கொடுத்த விவரங்கள்:
ஜாதகர் பிறந்த ஊர்: சீர்காழி
பிறந்த நாள்: 11-04-1973
பிறந்த நேரம்: 08.32 PM

அவரது ஏழாம் பாவ தொடர்பு கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது
ராகு(7, 11) – சுக்கிரன் (6, 9) – ராகு (7, 11) === தொடர்பு 6, 9

அதாவது ஏழாம் பாவம் 6, 9 ஐ தொடர்பு கொண்டுள்ளது, இதில் ஏழாம் பாவத்தில் ஆறாம் பாவ தொடர்பு எனபது வாழ்க்கை துணை இவரை விட்டு பிரிவதை குறிக்கும், மேலும் ஏழாம் பாவத்தின் ஒன்பதாம் பாவ தொடர்பு என்பது இவரது இரண்டாம் திருமணம் அல்லது கள்ளதொடர்பினை குறிக்கும்.

இதனை மனதில் கொண்டு ஜாதகரிடம் அவர் மனம் புண்படாதவாறு தற்சமயம் நீங்கள் முதல் கணவரை விட்டு பிரிந்து மற்றொரு நபருடன் வாழ்கிறீர்களா என தயக்கத்துடன் கேட்டேன். உடனே அவரது கண்களில் நீர் திரள ஆரம்பித்து விட்டது. தாங்கள் கூறியது உண்மை ஐயா, எனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் பிப்ரவரி 2000 இல் பிரிந்து விட்டேன் என கூறினார்.

மேலும் இவருக்கு 09-04-1997 இல் திருமணம் நடந்ததாகவும் கணவரை விட்டு பிரிந்து ஏறக்குறைய ஆறுவருடங்கள் மிகவும் துன்பப்பட்ட நிலையில் வாழ்ந்துவந்ததாகவும் பிறகு August 2006 இல் இவருக்கு மற்றொருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் திருமணம் செய்யாத மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார். மேலும் இந்த நிலை என்றும் நீடிக்குமா எனவும் கேட்டார்.

ஜாதகருக்கு
7 ம் பாவம் – 6, 9 ம் பாவ தொடர்பு
1 ம் பாவம் – 2, 4, 6, 8, 10 ம் பாவ தொடர்பு
9 ம் பாவம் – 2, 4, 6 ,8 10 ம் பாவ தொடர்பு
களத்திரகாரகன்
செவ்வாய் 1, 2, 4, 8, 10 ம் பாவ தொடர்பு என்ற வகையில் தொடர்பு கொண்டுள்ளன.

நமது ஆசான் திரு A.D அவர்கள் வகுப்பில் கூறும் போது ஏழாம் பாவம் கெட்டால் லக்ன கொடுப்பினையை பார் என்பார்.

அதுவும் கெட்டால் இறைஅருள் பாவமான ஒன்பதாம் பாவத்தை பார், மேலும் களத்திரகாரகன் ஆண் என்றால் சுக்கிரன், பெண் என்றால் செவ்வாய் ஆகியோரது நிலையை பார்க்க வேண்டும் என கூறி உள்ளார்.

இந்த ஜாதகத்தில் ஏழாம் பாவம், லக்ன பாவம் மற்றும் ஒன்பதாம் பாவம் ஆகியவை 7க்கு 12 ம் பாவமான 6 னை வலிமையாக தொடர்பு கொண்டுள்ளன, 6 ம் பாவம் தனிமையான வாழ்க்கையும், சமூக அங்கீகாரம் இல்லாத வாழ்க்கையையும் குறிக்கும். மேலும் களத்திர காரகம் செவ்வாய் ஏழாம் பாவத்திற்கு பாதகமான இரட்டைபடை பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது.

எனவே ஜாதகருக்கு திருமண விசயத்தில் விதி கொடுப்பினை இல்லை என்பதை அறிந்தேன்

எனவே மதி என்னும் தசா புத்திகள் இவரது ஏழாம் பாவத்திற்கு சாதகமானதாக உள்ளனவா என்பதை ஆராய முற்பட்டேன்

இதில் கேது, புதன், குரு ஆகியவற்றை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் ஏழாம் பாவத்திற்கு சாதகமற்ற இரட்டைபடை பாவங்களை தொடர்பு கொண்டுள்ளன, மேலும் சில கிரகங்கள் ஏழுக்கு 12 ம் பாவமான 6- யும் தொடர்பு கொள்கின்றன

எனவே தசா புத்திகளும் இவருக்கு பெரும்பாலும் சாதகமில்லாத நிலையில் அமைந்துள்ளன.

இருப்பினும் இவருக்கு 09-04-1997 இல் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போதுள்ள தசா புத்தி நிலையை பார்ப்போம். திருமணம் நடந்த சமயம் கேது தசை, புதன் புத்தி, குரு அந்தரம் நடந்துள்ளது.

இதில் (தசாநாதன்) கேது 1, 3, 7 ,11 ம் பாவ தொடர்பும்
புத்தினாதன் புதன் 1, 3 ம் பாவ தொடர்பும்
அந்தரநாதன் குரு 1 ம் பாவ தொடர்பும் பெற்றுள்ளன என்பதை கிரக தொடர்பிற்க்கான அட்டவனையை அன்பர்கள் கவனிக்கவும்

இவைகள் 7ம் பாவத்திற்கு சாதகமான பாவங்கள் என்பதால் திருமணம் நடந்துள்ளது.

இருப்பினும் இவருக்கு விதிப்படி திருமண வாழ்க்கை மறுக்கபட்டுள்மையால் இவருக்கு அடுத்து வந்த சுக்கிர தசையில், சுக்கிர புத்தி சனி அந்தரத்தில் பிப்ரவரி 2000 இல் கணவரை பிரிந்துள்ளார்
இதில் தசாநாதன் - சுக்கிரன் 2, 4 ,6 ,8, 10
புத்திநாதன் - சுக்கிரன் 2, 4 ,6 ,8, 10
அந்தரநாதன் - சனி 1, 2, 4, 8, 10
என்ற தொடர்புகளை பெற்றுள்ளன.
இதில் ஏழுக்கு 12 ம் பாவமான ஆறாம் பாவம் வலிமையாக செயல்பட்டதால் கணவனை பிரிந்தார். அதாவது நடப்பு தசை 6 ஐ மட்டும் தொடர்பு கொண்டால் அது 7 க்கு மட்டும் (கணவருக்கு) பிரச்னையை தரும், ஆனால் 6, 8, 10 என்ற தசாநாதனின் தொடர்பு 6 ம் பாவத்தை மேலும் வளர்த்து லக்னத்திற்க்கும், ஜாதகருக்கும் பலவிதமான பிரச்னைகளை தந்தது.

இவருக்கு August 2006 இல் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மற்றொருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தசாநாதன் சுக்கிரனாகவும், புத்தினாதன் ராகுவாகவும், அந்தரநாதன் சுக்கிரனாகவும் செயல்பட்டு இருக்கிறார்கள்.

சுக்கிரன் 2, 4, 6, 8, 10
ராகு 6, 9 என பாவ தொடர்பு கொண்டுள்ளன.

இதில் ராகுவின் 9ம் பாவ தொடர்பு இதில் 7 க்கு 3ம் பாவம் என்பதால் அடுத்த துணையை எற்படுத்தியுள்ளது.

9ம் பாவம் 2, 4, 6, 8 ,10 தொடர்பு பெற்றால் மேற்கண்ட பாவங்கள் பொருள்சார்ந்த பாவங்கள் என்பதால் 2வது துணையின் மூலம் இவருக்கு பணம், நிலம், வீடு கிடைத்துள்ளது. ஆனால் ஒன்பதாம் பாவம் 6ம் பாவத்தை தொடர்பு கொண்டுள்ளதால் இரண்டாவது திருமணம் மூலம் சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்த நிலை இப்படியே நீடிக்குமா என அவர் கேட்டபோது அவருக்கு தற்போது நடக்கும் திசை சுக்கிர தசை சனி புத்தியாக உள்ளது, இரண்டாவது துணைவருடன் சிருசில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அடுத்து வரும் புதன் புத்தி, மற்றும் கேது புத்திகளில் சுமூகமான உறவு நீடிக்கும் என்று கூறினேன். ஏனெனில் புதன், கேது 1, 3, 7 ,11 ம் பாவங்களை வலுவாக தொடர்பு கொண்டதால் அது லக்னத்திக்கும், ஒன்பதாம் பாவத்திற்கும் சாதகமான பாவமாக உள்ளது.

மேலும் 4-07-2014 இல் தொடங்க இருக்கும் சூரிய தசையில் இரண்டாவது நபருடன் கொண்டிருக்கும் உறவு முற்றிலும் நீங்கி விடும் என கூறினேன், ஏனெனில் சூரியன் வலுவான வகையில் 2, 4 , 8, 10 ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது மேற்கண்ட பாவங்களில் 4, 8 என்பது 9 ம் பாவத்திற்கு 8, 12 ம் பாவமாக வரும்

மேலும் தங்களுக்கு திருமண வாழ்க்கைக்கான விதி என்ற கொடுப்பினையும் மதி என்ற தசாவும் (சூரியன்) சாதகமான நிலையில் இல்லை என்றும் தாங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டு மனஅமைதி பெறுங்கள் என கூறி அவரை அனுப்பிவைத்தேன்.

 
Written Books in Astrology
astrologer in kumbakonam, astrology website in kumbakonam, kumbakonam best famous astrologer
Best Kumbakonam Astrologer
astrologer in kumbakonam, astrology website in kumbakonam, kumbakonam best famous astrologer
 
Home :: About Astrologer ::Services :: Articles :: Gallery :: Contact us WebDesign By - Blue Beez Mediaa
Quick Contact: Jothisha Aacharya P.Sakthi Vadivel 7/3A, Banadurai East street, Kumbakonam 612001. Call: 94427 42606
free hits
Track My Website
Copyright © 2015 Astrosakthi.in