Sri Durga Advanced K.P. Stellar Astro Center - Kumbakonam

mail astology kumbakonam Mail: ponperivelu@yahoo.co.in
Cell: +91 94427 42606
best astrologer in kumbakonam tanjore
 

ஆதிக்கம் செலுத்தும் ஆறாம் பாவம்

பொதுவாக அதிக பாவங்கள் குறிப்பாக லக்ன பாவம் ஆறாம் பாவத்தை தொடர்பு கொண்ட நபர்களின் நடத்தை வித்தியாசமானதாக இருக்கும். பிறரை அடிமைபடுத்துதல், பிறரை கட்டுப்படுத்தி வெற்றி அடைதல், பொதுமக்கள் தொடர்பில் இருந்து விலகி தனித்து இருத்தல், எல்லா மக்களுக்கும் உள்ள பொதுவான சிந்தனையில் இருந்து மாறுபட்ட சிந்தனயில் இருத்தல், எவருக்கும் அடங்காமை, தான் செய்வது தவறு என்று தெரிந்திருந்தும் மற்றவர்களை பற்றி கவலைபடாது அதையே திரும்ப செய்தல், சமூக கட்டுப்பாடுகளை மீறுதல் போன்ற குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.

குறிப்பாக ஏழாம் பாவம் ஆறாம் பாவ தொடர்பு பெற்றால் களத்திரத்திற்கு இது 12 ம் பாவமாகவும், லக்னத்திற்கு வெற்றி ஸ்தானமாக அமைவதால் இவர்கள் மனைவியை அடிமையாகவே வைத்திருப்பார். எதிலும் மனைவி தனக்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று மனைவி மீது மிகுந்த ஆதிக்கம் செலுத்துவார்கள். பெரும்பாலும் மனைவி நோயாளியாக இருப்பார். மற்றவர்கள் மீது இவர் மிகுந்த ஆதிக்கம் செலுத்துவதால் இவருக்கு மறைமுகமான எதிரிகள் உருவாகுவார்கள். சொந்த பந்தங்கள் கூட இவரின் ஆதிக்க மனப்பான்மை கண்டு விலகி சென்று விடுவார்கள்.

இருப்பினும் இவர்களுக்கு நிலையான வேலை இருக்கும். இவர்கள் எதிர்பாலினர் மீது காதல் கொண்டாலும் அது ஆதிக்கம் செலுத்தும் அடிமைபடுத்தும் காதலாகவே இருக்கும். மென்மையான உணர்வுகள் கொண்ட காதலாக இருக்காது. உறவுக்கு மட்டும் தான் பெண் என நினைப்பவர்களக பெரும்பாலானவர்கள் இருப்பார்கள்.

எதிலும் முரட்டுத்தனமான அணுகுமுறையே இவர்களிடம் இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் யாரிடமும் ஒட்டுதலாக இருக்க மாட்டார்கள். இவர்களுடன் மற்றவர்கள் ஜோடி சேர்வது கடினம். அப்படி கிடைத்தாலும் இவர்களது ஆதிக்கம் செலுத்தும் குணத்தால் விலகி சென்று விடுவார்கள். இவர்கள் தனியாக தான் தென் படுவார்கள்.

ஆனால் எதிலும் வெற்றி பெறுபவர்களாக இருப்பார்கள். மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்கள். ஐந்தாம் பாவமும் செவ்வாயும் ஆறாம் பாவ தொடர்பு பெற்றால் இவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அதில் சிறந்த வெற்றியாளர்களாக இருப்பார்கள்.

இனி 12 பாவங்களும் ஆறாம் பாவத்தை தொடர்பு கொள்வதால் ஏற்படும் விளைவுகளை காணலாம்.

1-6 யாரையும் ஆடக்கி ஆள வேண்டும் என்று எண்ணுபவராக இருப்பார். தனிமையை நாடுவார். பொதுஜன தொடர்பு இருக்காது. சிறிதளவு கடன் இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் வெற்றியாளர். நிரந்தர வேலை இருக்கும். உடலில் நோய் கிருமிகள் இருந்து கொண்டே இருக்கும்

2-6 பணமும் வைத்திருப்பார், அதன் மூலம் கடனும் வாங்குவார். சிறப்பாக பேசி வெற்றி அடைவார். இரண்டாவது சொத்து வாங்குவார். முகம் கண், பல் வாய் சம்மந்தமான நோய்கள் வரும்.

3-6 மிகவும் தைரியமானவராக இருப்பார். சகோதரர் மூலம் கடன் ஏற்படும், பகையும் ஏற்படும். தொலைதொடர்பு துறையில் வேலை செய்வார்.

4-6 ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் வாங்குவார். உற்பத்தி துறை, கல்வி துறையில் ஆசிரியர் பணி போன்றவற்றில் நிரந்தர வேலையில் இருப்பார். கண்டிப்பான ஆசிரியராக இருப்பார். சொத்து வைத்து கடன் வாங்குவார். உறவினர்களிடம் பகை ஏற்படும்.

5-6 உழைக்காமல் சம்பாதிப்பார். ஜோதிட துறையில் வெற்றியாளர். கலைத்துறை, விளையாட்டு துறை போன்றவற்றில் வெற்றியாளராக இருப்பார். இதயம் சம்பந்தமான பிரச்சனை வரலாம்.

6-6 பிறரை மிரட்டி வேலை வாங்குவார். நிரந்தர வேலை உண்டு. அதிகாரம் செய்து பிறரை வேலை வாங்குவார். அளவோடு கடன் வாங்குவார். எப்போதும் வெற்றியாளர்

7-6 மனைவியை அடிமையாக வைத்திருப்பார். இவருக்கு அதிக நண்பர்கள் இருக்க மாட்டார்கள். திருமண தடை உண்டு. தொழில் கூட்டாளியால் வம்பு வழக்கு உண்டு. மனைவி நோயாளியாக பெரும்பாலும் இருப்பார். செய்த தவறை ஒத்துகொள்ள மாட்டார்.

8-6 திடீர் கடன், திடீர் நோய், திடீர் விபத்து வரும். கடினமான வேலைகள் செய்வார். மர்ம ஸ்தானம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்.

9-6 பாரம்பரிய நோய்கள் வரும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு உண்டு. மிக எளிதான வெற்றியாளர். ஆன்மீக துறையில் பணி புரிவார்.

10-6 தொழிலில் அந்தஸ்து கிடைக்கும். தொழிலில் வெற்றியாளராக இருப்பார். தொழில் மூலம் விரோதிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு

11-6 நண்பர்கள் மூலம் கடன் வரும், பகையும் வரும். மருமகன், மருமகள் விரோதம் காட்டுவார்கள்.

12-6 முதலீடுகள் மூலம் ஆதாயம் அடைவர். ரகசிய வேலை தொடர்பாக பணி செய்வார். முதலீடை வைத்து கடன் வாங்குவார். அடிக்கடி நோய்வாய் பட்டு மருத்துவ செலவு செய்வார்.

6 ம் பாவம் மற்ற பாவங்களைத் தொடர்பு கொள்வதால் ஏற்படும் விளைவுகள்:

6-1 வேலை செய்வதன் மூலம் சுயகௌரவம் சமுதாய அந்தஸ்து, போன்றவை கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்

6-2 வேலை மூலம் பணம் வரும். ஹோட்டல் தொழில், ஜவுளி தொழில், மருத்துவ தொழில் மூலம் பணம் வரும்

6-3 அடிக்கடி இடமாற்றம் வரும். ஒரே வேலை செய்யாமல் மாறிக்கொண்டே இருப்பார்.

6-4 நிலையான வேலை, ஒரே இடத்தில் இருப்பார். நிலையான கடன் இருக்கும். வந்த நோய் எளிதில் குணமாகாது. தன்னை கவர்ச்சி படுத்தி கொள்ள மாட்டார்.

6-5 வேலை கிடைப்பது கடினம், பணம் வராது. வேலைக்காரியை காதலிப்பார். நோய், எதிரி கிடையாது. போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்.

6-6 நிரந்த வேலை உண்டு, பென்ஷன் வாங்குவார். அளவோடு கடன் வாங்குவார்.

6-7 வேலைகாரியிடம் ஆதிக்க குணத்தை காட்டாமல் அவர்களை சமமாக நடத்துவார். ஒருவரிடம் மட்டும் கடன் வாங்குவார். அல்லது தகுதிக்கு உட்பட்டு கடன் வாங்குவார்.

6-8 வீட்டு விலங்குகள் கடிக்கும் அபாயம் உண்டு. கடன் இரு மடங்காகும். தொழிலாளர்களால் பிரச்சனை வரும். வேலை கிடைக்கும். ஆனால் கூலி வேலை, அடியாள் வேலை கிடைக்கும். வயிற்றில் நோய் வரும், வயிற்றில் அறுவை சிகிச்சை நடக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்கள் வர வாய்ப்புண்டு

6-9 வேலை கிடைக்காது. வேலைக்கு போக மாட்டார். வேலை கிடைத்தாலும் பொறுப்பாக செய்ய மாட்டார். வேலை போய்விடும்.

6-10 பெரிய ஹோட்டல் அதிபர். பெரிய ஜவுளி கடை அதிபர். பெரிய மருத்துவர். கௌரவமான பெரும் பதவியில் இருப்பார்.

6-11 கடன் அடையும், நோய் தீரும், ஜாதகர் தன்னுடைய பணியை விரும்பி செய்வார்.

6-12 உழைப்பு வீணாகி நஷ்டம் அடைவார். நோயினால் உறுப்புகளின் செயல்பாடு குறையும். வழக்குகளில் தோல்வி மற்றும் வழக்குகளால் தனவிரயம் ஏற்படும்.

 
Written Books in Astrology
astrologer in kumbakonam, astrology website in kumbakonam, kumbakonam best famous astrologer
Best Kumbakonam Astrologer
astrologer in kumbakonam, astrology website in kumbakonam, kumbakonam best famous astrologer
 
Home :: About Astrologer ::Services :: Articles :: Gallery :: Contact us WebDesign By - Blue Beez Mediaa
Quick Contact: Jothisha Aacharya P.Sakthi Vadivel 7/3A, Banadurai East street, Kumbakonam 612001. Call: 94427 42606
free hits
Track My Website
Copyright © 2015 Astrosakthi.in